பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 24: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்றார். இதில், சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட பொருளாளர் ஜெயராம் நன்றி கூறினார். சென்னை மாநகர காவல்துறை, அரசு ஊழியர்கள் மீது நடத்திய தடியடியையும், தாக்குதலை கண்டித்தும், நிலுவையில் உள்ள கோரிக்கைளை நிறைவேற்றக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories:

More
>