×

பெல்ஜியத்தில் இருந்து சென்னை திரும்பினார் நடிகரும், ரேஸருமான அஜித்குமார்!

 

சென்னை: பெல்ஜியத்தில் இருந்து நடிகரும், ரேஸருமான அஜித்குமார் சென்னை திரும்பினார். அஜித் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கார் ரேஸில் தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதற்காகவே அவரது அடுத்த பட ஷூட்டிங்கும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், உலகின் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான 24H Series-இல் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டு இராண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்காக அஜித்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.

அஜித் டீம் உடன் கொண்டாடிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அஜித் போடியம் மீது இந்திய கொடியுடன் ஏறி நின்றிருக்கிறார். கோப்பை உடன் வெற்றியை அவர்கள் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெல்ஜியத்தில் இருந்து நடிகரும், ரேஸருமான அஜித்குமார் இன்று சென்னை திரும்பினார். தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அவர் சென்னை திரும்பி உள்ளார்.

 

 

Tags : Ajith Kumar ,Chennai ,Belgium ,Ajith ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து