ஹைதராபாத்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை ஹைதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31வது லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 242 ரன்களை குவித்தது. 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.
