×

மக்கள் வாக்களிக்க செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்!

சென்னை: மக்கள் வாக்களிக்க செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026, 23.04.2026 அன்று வாக்குபதிவு நடைபெறுவதை முன்னிட்டு (21.04.2026 முதல் 26.04.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, அவ்வாறு இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அனுமதி ரத்து போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்காணும் அலைப்பேசி எண்கள் மூலம், வாட்ஸ் ஆப் / குறுஞ்செய்தி / குரல் பதிவு மூலமாக புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : Omni ,Chennai ,Transport and Road Safety Commission ,Tamil Nadu Legislative Assembly Election 2026 ,
× RELATED திருப்பதிக்கு இணையாக...