×

தொழில்துறையின் நீண்ட கால கோரிக்கையான பின்னலாடை வாரியம் அமைக்க நடவடிக்கை

 

திருப்பூர், ஏப். 21: தொழில்துறையினரின் நீண்ட கால கோரிக்கையான பின்னலாடை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக சார்பில் தினேஷ்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வணிகர்கள், தொழில்துறையினர், தொழிலாளர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள், தன்னார்வ அமைப்பினர் உள்பட பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து வருகிறார். அவர்களும் தினேஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Tags : Tiruppur ,DMK ,Tiruppur South ,Dinesh Kumar ,
× RELATED உடுமலையில் ஹாக்கி போட்டி