×

பவளமலை அடிவாரத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கோபி,ஏப்.21: சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு கோபி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று பவளமலை அடிவாரத்தில் நடந்தது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் கலை நிகழ்ச்சி, கும்மியாட்டம், பேரணி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களின் பேரணி ஆகியவற்றின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Coral Mountain ,Gopi ,Gopi Regional Development Office ,Women's Self-Help Group ,
× RELATED கோபி தொகுதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்