அகமதாபாத்: குஜராத் அணிக்கு 200 ரன்களை மும்பை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் விளையாடிய திலக் வர்மா சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.
