- இஸ்லாமாபாத்
- மோடி
- காங்கிரஸ்
- தில்லி
- மூத்த
- ஜெய்ராம் ரமேஷ்
- பாக்கிஸ்தான்
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
- ஈரான்
- எங்களுக்கு
டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை ‘தனிமைப்படுத்துவதில்’ நாட்டின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து விட்டதாக மூத்த காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருக்கிறார்.ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், பிரதமர் மோடியை ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் உலக அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் திட்டத்தில் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை கடும் தோல்வியடைந்துள்ளதை ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடைபெறும் நிகழ்வுகள் வெளிப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் அவல நிலையில் இருந்தாலும், அந்நாட்டிற்கு நீண்டகால தீவிரவாத தொடர்பு இருந்த போதும் அமெரிக்கா – ஈரான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் தற்போது ஒரு முக்கிய ராஜதந்திரப் பங்கை வகிக்கிறது ஏற்று கொள்ள முடியாத ஒன்று என்றார்.
தற்போதைய பிரதமர் மோடியின் பிராந்திய மற்றும் உலகளாவிய ஈடுபாடு மற்றும் ராஜதந்திர பாணி பாகிஸ்தானை தனிமைப்படுத்தத் தவறிவிட்டன என்பது இதன் மூலம் மிகத் தெளிவாக தெரிகிறது. நவம்பர் 2008-ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு அப்போதைய காங்கிரஸ் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சாதித்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய அடையாளத்தை தற்போது பாகிஸ்தான் பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை மோடியின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு மாபெரும் பின்னடைவு என்று வர்ணித்துள்ள காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், பாஜக அரசின் ராஜதந்திர உத்திகளில் ஒரு முழுமையான சீரமைப்பு தேவை, அதை செய்ய மோடியால் இயலாது என்று கூறினார்.
அதே போல பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குத் தூண்டுதலாக இருந்த மற்றும் இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில் அவ்வப்போது கருத்துக்களை கூறி வரும் பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டிரம்பின் பெரும் விருப்பத்திற்குரியவராக மாறியிருப்பதும் இந்தியாவிற்கு ஒரு கடுமையான பின்னடைவு என்று ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
