×

சாக்குமூட்டையில் ரூ.35 லட்சம் பறிமுதல்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலனியில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை மடக்கினர். விசாரணையில் அவர், கோவில்பட்டியை சேர்ந்த உத்தரக்குமார் என்பதும், பைக்கின் முன்பகுதியில் வைத்திருந்த சாக்கு மூட்டையில் ரூ.35 லட்சத்து 72 ஆயிரம் பணம் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து பறக்கும்படையினர், பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து உத்தர குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kovilpatti ,Election Flying Squad ,Loyal Mill Colony ,Thoothukudi district ,Uttarakumar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து