×

‘நானும் பச்சையாக பேசுவேன்’; செங்கோட்டையன் நடமாட முடியாது: கோபியில் எடப்பாடி எச்சரிக்கை

கோபி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த பகுதியில் இருந்த எம்.எல்.ஏ (செங்கோட்டையன்) திமிர் பிடித்தவர். சுயநலம், திமிர், அகங்காரத்தால் அவரை அதிமுகவில் இருந்து வெளியேற்றினோம். ஜெயலலிதா இருக்கும்போது செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோது அவரது மனைவியும், மகனும் தலைமைச் செயலகம் வந்து அவர் மீது புகார் கொடுத்தனர். அது, கேவலமான புகார்.

இதையடுத்து அவரை ஜெயலலிதா பதவியை விட்டு இறக்கிவிட்டார். அப்படிபட்ட ஆளை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கினது எனது தப்பு. அவர் இப்போது வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நாக்கு இருக்கிறது என்று அசிங்கமாக பேசினால் அவர் ரோட்டில் நடக்க முடியாது. அத்தனை ஆதாரம் வைத்திருக்கிறேன். நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். நீங்கள் மிகவும் மோசமான ஆள். நான் பச்சையாகப் பேச ஆரம்பித்துவிடுவேன். எனது பதவி மதிப்புக்காக அடக்கி வாசிக்கிறேன்.

எனது ஒரு பக்கத்தை தான் பார்த்திருக்கிறீர்கள், இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில்லை, நான் எதுக்கும் துணிந்தவன். அரசியல் ரீதியாகப் பேசுவதை விட்டுவிட்டு தனிப்பட்ட முறையில் பேசினால் நிறைய இருக்கிறது, டிவியில் போட்டுவிடுவேன். பிறகு கோபியில் நடமாட முடியாது. காறித் துப்பிவிடுவார்கள் என்றார்.

Tags : Kobi ,Secretary General ,Edapadi Palanisami ,Erode district ,M. ,L. A (Sengkottayan) Timir ,Jayalalitha ,
× RELATED சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து...