பெரம்பலூர், ஏப். 18: கடந்த (2025-26) கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்ரீராமகிருஷ்ணா பப்ளிக் பள்ளி மாணவ – மாணவிகள் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாவட்டத்திலேயே இரண்டாம் இடத்தை பெற்றனர்.
சாதித்த மாணவ மாணவிகள் அஸ்வினி – 484, தருண்பிரசாத் – 479, கனிஷ்கா – 478, சாருமதி – 478, கனிஷ்யா – 474, சஜிதா – 473 மற்றும் 59 மாணவ – மாணவிகள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் சேவை செம்மல் சிவசுப்பிரமணியம், செயலாளர் எம்.எஸ்.விவேகானந்தன் இனிப்புகள் வழங்கி வெற்றியாளர்களை வாழ்த்தியதோடு, அவர் தம் பெற்றோர்களையும் கௌரவப்படுத்தினார்.
