நன்றி குங்குமம் டாக்டர்
வலியை வெல்வோம்
உங்கள் உடல் எப்படி செயல்படுகிறது? அதாவது கையை உயர்த்தும்போது, வலியை உணரும்போது, அல்லது சமநிலை தவறாமல் நிற்கும்போது எப்படி இயங்குகிறது என்று அறிய ஒரு ஆர்வம் இருக்கும் இல்லையா?
இவை அனைத்தும் நரம்பு மண்டலம் (Nervous System) எனும் அற்புதமான கட்டுப்பாட்டு அமைப்பின் வேலைதான். இந்த அமைப்பு சேதமடைந்தால் வாழ்க்கை எவ்வளவு கடினமாகும் என்று யோசித்து இருக்கிறீர்களா? இங்குதான் நரம்பியல் இயன்முறை மருத்துவம் (Neurological Physiotherapy) உதவுகிறது.
நரம்பு மண்டலத்தை இரண்டு பெரிய பகுதிகளாகப் பிரிக்கலாம்
1.மைய நரம்பு மண்டலம் (Central Nervous System – CNS)
மூளை (Brain) மற்றும் முதுகெலும்பு (Spinal Cord). இது உடலின் “கட்டுப்பாட்டு மையம்” என்று அழைக்கப்படும்.
மூளை
மூளையின் மேல் பகுதி (Cerebrum)- சிந்தனை, உணர்ச்சி, இயக்கம் சிறுமூளை (Cerebellum) – சமநிலை, ஒருங்கிணைப்பு செயல்களை கவனித்துக் கொள்கிறது.
மூளைதண்டு (Brainstem) – இதயத் துடிப்பு, சுவாசம் போன்ற அடிப்படை செயல்களைக் கவனிக்கிறது.
முதுகெலும்பு
31 ஜோடி நரம்புகள். இது மூளையிலிருந்து உடல் பகுதிகளுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது.
2.புற நரம்பு மண்டலம் (Peripheral Nervous System – PNS)
CNS-க்கு வெளியே உள்ள அனைத்து நரம்புகளும் புற நரம்பு மண்டலம் ஆகும்.
(i)சோமாடிக் நரம்பு மண்டலம்:
தன்னிச்சையான இயக்கங்கள்
(கை கால்களை அசைப்பது).
(ii) ஆட்டோநாமிக் நரம்பு மண்டலம்:
தன்னிச்சையற்ற செயல்கள்
சிம்பதெடிக் (எச்சரிக்கை – fight or flight),
பாராசிம்பதெடிக் (ஓய்வு – rest & digest).
நரம்பு மண்டலத்தின் செயல்பாடு (Physiology)
நரம்பு மண்டலத்தின் மூன்று முக்கிய செயல்பாடுகள்
1.சென்சரி இன்புட் (Sensory Input)
தோல், கண், காது போன்றவை உணர்ச்சிகளை (வெப்பம், வலி, ஒலி) sensory neurons வழியாக CNS-க்கு அனுப்பும்.
2.இன்டெக்ரேஷன் (Integration)
மூளை மற்றும் முதுகெலும்பு இந்தத் தகவல்களை ஒன்றிணைத்து, முடிவு எடுக்கும்.
3.மோட்டர் அவுட்புட் (Motor Output)
நரம்பு மண்டலம் எடுக்கும் முடிவுகளை எஃபெக்டர் உறுப்புகள் (effector organs) எனப்படும் இலக்கு உறுப்புகளுக்கு – அதாவது தசைகள் மற்றும் சுரப்பிகள் – எஃபெரென்ட் நரம்பிழைகள் (efferent fibers) வழியாக அனுப்புகிறது. இந்த எஃபெரென்ட் நரம்பிழைகள் மூலம் சமிக்ஞைகளை எடுத்துச் செல்லும் மோட்டர் நியூரான்கள் (motor neurons) தசைகளைச் சுருக்கச் செய்து, இயக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது மோட்டர் அவுட்புட் (motor output) என அழைக்கப்படும்.
எஃபெரென்ட்-மையநரம்பு மண்டலத்திலிருந்து (மூளை/முதுகெலும்பு) வெளியே செல்லும் திசை. மோட்டர் நியூரான்கள் – இயக்கத்தை உருவாக்கும் நரம்பணுக்கள் (somatic motor neurons – தன்னிச்சையான தசை இயக்கம்.
autonomic motor neurons – தன்னிச்சையற்ற சுரப்பி/மென்மையான தசை இயக்கம். உங்கள் கையை உயர்த்தும்போது, மூளையிலிருந்து சமிக்ஞை முதுகெலும்பு வழியாக motor neuron-க்கு செல்கிறது.
இந்தப் பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டால் என்ன ஆகும்?
பக்கவாதம் போன்ற பலவீனம், நரம்பு செயல்பாடுகளில் ஏற்படும் பிரச்னைகள், நரம்பு சேதம் ஏற்பட்டால்:
ஸ்ட்ரோக்: மூளை ரத்த ஓட்டம் தடை – hemiplegia (ஒரு பக்க பலவீனம்).
முதுகெலும்பு காயம்: paraplegia அல்லது quadriplegia.
பார்கின்சன்: Dopamine குறைவு – tremor, rigidity.
மல்டிபிள் ஸ்க்லெரோசிஸ் (MS): Myelin சேதம் – fatigue, coordination loss.
பெரிஃபெரல் நியூரோபதி: Diabetes அல்லது காயத்தால் – numbness, pain.
இவை muscle weakness, spasticity, balance issues, sensory loss, pain (referred pain உட்பட) ஏற்படுத்தும்.
நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity)
இது மூளையின் அற்புதமான திறன் – புதிய இணைப்புகளை உருவாக்கி, சேதத்தை ஈடுகட்டும். குழந்தைப் பருவத்தில் அதிகம், வயதானாலும் பயிற்சியால் தூண்டலாம். இது பிசியோதெரபியின் அடிப்படை.
பிசியோதெரபியின் பங்கு
நியூரோ ரிஹேபிளிடேசன் பிசியோதெரபி என்பது “மருந்து” அல்லாத “பயிற்சி மற்றும் மறுபயிற்சி சிகிச்சை” ஆகும். இது neuroplasticity ஐ தூண்டி, புதிய நரம்பு பாதைகளை உருவாக்க உதவுகிறது.
நீங்கள் ஒரு பந்தைப் பிடிக்க முடிவு செய்தால், மூளையிலிருந்து வரும் சமிக்ஞை efferent fibers வழியாக motor neurons-க்கு சென்று, கை தசைகளைச் சுருக்கச் செய்து பந்தைப் பிடிக்க உதவுகிறது.
இது பிசியோதெரபியில் மிக முக்கியமானது, motor neurons-ஐ தூண்டும் பயிற்சிகள் (task-specific training, FES) மூலம் இழந்த இயக்கத்தை மீட்டெடுக்க நியூரோபிளாஸ்டிசிட்டியைப் பயன்படுத்துகிறோம்
முக்கிய பங்குகள் மதிப்பீடு (Assessment)
*தசை வலிமை (Muscle strength),
*தசை டோன் (Muscle tone),
*சமநிலை (Balance),
*நடை (Gait),
*உணர்வு (Sensation)
ஆகியவற்றை சோதித்து, நோயாளியின் செயல்பாட்டு வரம்புகளை (Functional limitations) கண்டறிதல்.
வலி மேலாண்மை (Pain Management)
*TENS (மின்சார தூண்டல் சிகிச்சை),
*கைமுறை சிகிச்சை (Manual therapy),
*டிரிகர் பாயின்ட் ரிலீஸ் (Trigger point release) ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.
மோட்டர் ரீலர்னிங் (Motor Relearning)
குறிப்பிட்ட பணிக்கான பயிற்சி (Task-specific training) – திரும்பத் திரும்ப செய்யும் பயிற்சி (Repetitive practice).
எடுத்துக்காட்டு: நடை மீட்டமைப்புக்காக ட்ரெட்மில் மீது நடைப்பயிற்சி (Walking on treadmill for gait re-training).
பலவீனத்தை சரி செய்தல் (Correction of Weakness):
*தசை வலுப்படுத்தும் பயிற்சிகள் (Strengthening exercises),தடுப்பு (Prevention):
*இரண்டாம் நிலை சிக்கல்களைத் தடுத்தல் – தசை சுருக்கம் (Contractures),
*அழுத்தப் புண்கள் (Pressure sores) போன்றவை.
நவீன நுட்பங்கள் (Advanced Techniques):
*Constraint-Induced Movement Therapy (CIMT) – பாதிக்கப்பட்ட கையை அதிகம் பயன்படுத்த கட்டாயப்படுத்தும் சிகிச்சை.
*ரோபோ உதவி பயிற்சி (Robotic-assisted training) மற்றும் Virtual Reality – திரும்பத் திரும்ப பயிற்சியை அதிகரித்து, உந்துதலை (Motivation) உயர்த்தும்.
Functional Electrical Stimulation (FES)
செயல்பாட்டு மின்சாரத் தூண்டல் சிகிச்சை.
மிரர் தெரபி (Mirror Therapy)
ஆரோக்கியமான வலது கையைப் பார்த்து, இடது கை செயல்படுவதாக கற்பிக்கப்படும் பயிற்சி.நரம்பியல் என்பது உடலின் “கட்டுப்பாட்டு அமைப்பு” (Control System) போன்றது. அதன் உடற்கூறியியல் (Anatomy) என்பது வடிவம் மற்றும் கட்டமைப்பு ஆகும். அதாவது, மூளை, முதுகெலும்பு, நரம்புகள், நியூரான்கள் ஆகியவற்றின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறது.
அதன் உடற்செயலியல் (physiology) என்பது செயல்முறை மற்றும் வேலை செய்யும் விதம் ஆகும். அதாவது, நரம்புகள் எப்படி சமிக்ஞைகளை அனுப்புகின்றன, மூளை எப்படி தகவல்களைப் பெற்று ஒன்றிணைக்கிறது, தசைகளுக்கு எப்படி கட்டளை அனுப்புகிறது என்பதை விளக்குகிறது.ஆனால் பிசியோதெரபி இந்தக் கட்டுப்பாட்டு அமைப்பை சேதமடைந்த பிறகு மீட்டெடுக்கும் மந்திரம் (Magic) போன்றது. நரம்பு மண்டலம் சேதமடைந்தாலும் (விபத்து, பக்கவாதம், முதுகெலும்பு காயம் போன்றவற்றால்), அது முழுமையாக அழிந்துவிடுவதில்லை. அது தன்னைத் தானே மறுசீரமைத்துக் கொள்ளும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளது. இந்தத் திறனுக்குப் பெயர் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity).
இழந்ததை மீட்டெடுக்க மிக முக்கியமானவை
1.ஆரம்பத்திலேயே பயிற்சி தொடங்குதல் (Early Intervention)
2. திரும்பத் திரும்ப பயிற்சி (Repetition)
3.குறிப்பிட்ட பணிக்கான பயிற்சி (Task-specific practice)
உதாரணம்: நடப்பதற்கு நடை பயிற்சி, கையைப் பயன்படுத்த கைப் பயிற்சி.
4.உந்துதல் (Motivation):
நோயாளி தானே ஆர்வமாக பயிற்சி செய்ய வேண்டும்.இந்த நான்கும் சரியாக இருந்தால், எந்த நரம்பு சேதமும் பெருமளவு மீண்டும் செயல்படும். இழந்த இயக்கம், சமநிலை, உணர்வு, நடை போன்றவை ஓரளவு திரும்பக் கிடைக்கும்.
ஒரு பெரிய மரம் புயலில் வேரோடு சாய்ந்துவிட்டால், அதை உடனே நிமிர்த்தி, சரியான ஆதரவு கொடுத்து, தண்ணீர் ஊற்றி, வேர்களைப் பாதுகாத்தால் மீண்டும் வளர்ந்து பழையபடி பசுமையாகும். அதேபோல், நரம்பு மண்டலம் சேதமடைந்தால், பிசியோதெரபி சரியான “ஆதரவு” கொடுத்து, திரும்பத் திரும்ப பயிற்சி செய்யச் செய்து, புதிய நரம்பு இணைப்புகளை உருவாக்க உதவுகிறது. மரம் மீண்டும் பசுமையாக வளர்வது போல், நரம்புகளும் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
தொகுப்பு: இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
