×

திருப்பூர் தேசிய சிறுபான்மை கிருத்துவ மக்கள் இயக்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு

ஈரோடு, ஏப். 17: தேசிய சிறுபான்மை கிருத்துவ மக்கள் இயக்கத்தினர், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஈரோட்டில் தேசிய சிறுபான்மை கிருத்துவ மக்கள் இயக்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச்செயலாளர் அந்தோணி ஜான்சன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் பிரசன்னா முன்னிலை வகித்தார்.

இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், திமுக கூட்டணியோடு இணைந்து பாசிசத்தை வீழ்த்தி, திமுக தலைவரை 2வது முறை முதல்வராக அரியணையில் அமர செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Tags : Tiruppur ,National Minority Christian People's Movement ,DMK alliance ,Erode ,DMK ,general secretary ,Anthony Johnson… ,
× RELATED தாளவாடி அருகே பரபரப்பு பள்ளிக்குள் புகுந்த யானை கூட்டம்