ஈரோடு மேற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளரை ஆதரித்து, பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் நேற்று பிரசாரம் மேற்கொண்டனர். இந்த பிரசாரம் மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, 3 மணிக்கே பெண்கள், குழந்தைகளை, அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆட்டோவில் அழைத்து வில்லரசம்பட்டி நால்ரோட்டில் நிற்க வைத்தனர். குறிப்பாக, கூட்டத்திற்கு வந்த பெண்கள் 150க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
ஆனால், அண்ணாமலை, ஜி.கே.வாசன், வேட்பாளர் ஆகியோர் மாலை 6 மணிக்கே கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள், குழந்தைகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அண்ணாமலை பேச ஆரம்பித்ததும்,அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கும்பல் கும்பலாக கலைந்து சென்றனர்.
