×

ஈரான் போர் விவகாரம் பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ஈரான் போர் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் நேற்று பிரதமர் மோடி தொலை பேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஈரான் போரால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதித்தார். மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பையும், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தையும் அவசரமாக மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறுகையில்,’ எனது அன்பு நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பையும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் அவசரமாக மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டோம். பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்துவதற்காக நமது நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : PM ,Modi ,President ,Iran ,New Delhi ,Emmanuel Macron ,West Asia… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...