- கல்லறை சாலை
- வியாழன். எம். வேட்பாளர் டி. ஜெயகுமார்
- சென்னை
- ராயபுரம் சட்டமன்றம்
- . எம். பரிந்துரைக்கப்பட்ட டி. ஜெயகுமார்
- டி ஜெயக்குமார்
- அமைச்சர்
- மீ.
சென்னை: ராயபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜெயக்குமார் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு வருகிறார். வழிநெடுகிலும் வாக்காளர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வரவேற்பு அளிக்கிறார்கள். டி.ஜெயக்குமார் அமைச்சராகவும் எம்.எல்.ஏவாகவும் இருந்த காலத்தில் கட்டிய கட்டிடங்கள் மற்றும் நலத்திட்டங்களை வாக்காளர்களே அவரிடம் நன்றி உணர்ச்சியோடு எடுத்துச் சொல்லி இரட்டை இலைக்கே வாக்கு போடுவோம் என்று உறுதி மொழி அளிக்கிறார்கள்.
பிரசாரத்தில் டி.ஜெயக்குமார் பேசும்போது, ‘‘மக்கள் நலப்பணிகளை வேகமாக முடிக்கி விட வேண்டியது மக்கள் பிரதிநிதியின் கடமை. என்னைப் பொறுத்தவரை தொகுதியில் உள்ள எல்லா டிப்பார்ட்மெண்ட்களையும் அழைத்து சிவில், மெட்ரோ ஒர்க், மின்சார பணிகள், கழிவுநீர் குழாய் பணிகள் முடிக்க எவ்வளவு நாள் ஆகும் என்று அதிகாரிகளிடம் கேட்டு இரண்டு மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என்பேன். அவர்கள் சொன்ன குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்காவிட்டால் திரும்பவும் அழைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிப்பேன். அப்படிச் சொன்னால்தான் பயம் இருக்கும். அப்படி ஆய்வு செய்தால்தான் திட்டங்கள் ஒழுங்காக நடக்கும்.
பத்மநாபா தியேட்டர் அருகில் உள்ள எம்.எஸ்.நகரில் நான் கட்டிய கட்டிடத்தையும் சமீபத்தில் திறந்தனர். இப்படி நான் கட்டிய கட்டிடங்களை கத்திரிக்கோல் வைத்து திறக்கிறார்கள். கிழக்கு கல்லறை சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை கட்ட தொடங்கி நான்கு வருடங்கள் ஆகிறது. ஒன்றரை வருடத்தில் முடிக்க வேண்டிய கட்டிடம் இது. இன்னும் முடிக்கவில்லை. இதனால் வெளியில் பத்தாயிரத்துக்கு வாடகைக்கு குடியிருக்கிறார்கள். அவர்கள் கஷ்டம் தெரியவில்லை.
நல்லா இருந்த கட்டிடத்தை இடித்து இங்கு புதிய கட்டிடம் கட்ட 20 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளனர். இப்படி இருந்தால் காண்டிடாக்டரை எப்படி வற்புறுத்த முடியும். என்னை நீங்கள் தேர்வு செய்த உடன் மூன்று மாதங்களில் இந்தகட்டிட வேலைகளை முடித்து திறந்து வைத்து உங்களை அங்கு குடியமர்த்துவேன்’’என்றார். டி.ஜெயக்குமார் வாக்குறுதியை கேட்டு கூடியிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
