×

பொன்னமராவதியில் திமுக கூட்டணி கட்சியினர் வீடுவீடா வாக்குசேகரிப்பு

பொன்னமராவதி,ஏப்.16: பொன்னமராவதி பேரூராட்சிப்பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீடுவீடாகச்சென்று திருமயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரகுபதிக்கு வாக்கு சேகரித்தனர். திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதிக்கு ஆதரவாக பொன்னமராவதி நகரச்செயலாளர் அழகப்பன் தலைமையில் பேரூராட்சியின் 3,4,5ஆகிய வார்டு பகுதிகளில் வீடுவீடாகச்சென்று வாக்குகள் சேகரித்தனர்.

இதில் பேரூராட்சித்தலைவர் சுந்தரிஅழகப்பன், துணைத்தலைவர் வெங்கடேஷ், வார்டு கவுன்சிலர்கள் புவனேஸ்வரி காளிதாஸ், சிவகாமிமலைச்சாமி, முத்துலெட்சுமி சசி, இஷா விகாஷ், ராமநாதன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் தேனிமலை, காங்கிரஸ் நகரத்தலைவர் பழனியப்பன், நிர்வாகிகள் செல்வக்குமார், ஆலவயல் முரளிசுப்பையா, முத்தையா, ஜெயக்குமார், இம்ரான், பாலுச்சாமி உட்படபலர் கலந்து கொண்டனர்.

 

Tags : DMK ,Ponnamaravathi ,Thirumayam ,Raghupathi ,Minister ,Alagappan… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...