×

மதுரை மத்திய, மேற்கு தொகுதியில் திமுக சார்பில் மார்ச் 27ல் சைக்கிள் பிரசாரம்

திருப்பரங்குன்றம், பிப். 23: மதுரை மாநகர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி நேற்று மாலை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்க்கு பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையை சிம்மக்கல்லில் நிறுவியுள்ளோம். தற்போது அனைத்து தரப்பு மக்களும் குடும்பம், குடும்பமாக கலைஞர் சிலை முன்பு புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.  திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மார்ச் 27ம் தேதி ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போராரு என சைக்கிள் பிரசாரம் மதுரை மத்திய, மேற்கு தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. மார்ச் 1ம் தேதி வீடியோ பாடல் கேசட் வெளியிட உள்ளோம். மார்ச் 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள தேவையான பணிகளை செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : Bicycle Proclamation ,Central and ,Madurai ,
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...