- தரும்புரி
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- தரும்புரி
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திமுகா
- கூட்டணி
- தரும்புரி
தருமபுரி: தருமபுரியில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்; வரலாற்றுச் சிறப்பு, இயற்கை எழில் மிகுந்த தருமபுரி. பெண்கள் என்னை அண்ணன் என்று பாசத்தோட அழைக்க அடித்தளம் அமைத்த ஊர் தருமபுரி. 1989 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுவை தருமபுரியில் கலைஞர் உருவாக்கினார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விதையையும் தருமபுரியில் தான் விதைத்தோம். மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாம் தருமபுரியில் தொடங்கப்பட்டது.
புதிய சாதனை ன திட்டங்களை தொடங்கும் இடமாக தருமபுரி உள்ளது. தருமபுரியில் ரூ.1,714 கோடி வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2008ல் கலைஞர் உருவாக்கிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் என்னுடைய மேற்பார்வையில்தான் நடந்தது. ரூ.1,929 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி பாதுகாப்பான குடிநீர் வழங்கியவன் இந்த ஸ்டாலின். மபுரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 3ம் கட்ட பணியை தற்போது செய்து கொண்டிருக்கிறோம். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்தது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்.
யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால் அது வியாபாரம்; எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்; இந்தியாவிலேயே தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக உயர்த்தி உள்ளோம். 200 ஆண்டுக்கு முந்தைய பிற்போக்கு சமூகத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. தமிழ்நாட்டுக்கு துரோகம் பண்ணக்கூடிய கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுவந்துள்ளேன். இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மாடல் திராவிட மாடல் என்ற அளவுக்கு தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக எல்லோருடைய வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்படுகிறது.
தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும்போது டெல்லியில் நமது எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவார்கள். தமிழ்நாட்டில் நாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்தும் போது நாடாளுமன்றத்தில் நமது எம்.பி.க்கள் போராடுவார்கள். அனைத்து எம்.பி.க்களும் நாளை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவிட்டுள்ளேன். தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெல்லும் வரை நமது போராட்டம் ஓயக் கூடாது. போராட்டத்தில் வெல்லும் வரை நமது உரிமைக் குரல் அடங்கக் கூடாது. நாம் அடிக்கும் அடியில் திமிரெடுத்த பாஜக அடங்கியே ஆக வேண்டும்.
ஒவ்வொருவர் முதுகிலும் குத்திய எடப்பாடி பழனிசாமி, தற்போது தமிழ்நாட்டின் முதுகிலும் குத்தப் பார்க்கிறார். ராமதாஸை தவிக்கவிட்டுவிட்டு, ஊழல் வழக்குக்கு பயந்து கூட்டணி வைத்துக் கொண்டு உலக மகா உத்தமர் போல. ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டுவிட்டு ஊழல் வழக்குக்கு பயந்து பாஜகவுடன் அன்புமணி கூட்டணி; அன்புமணி பற்றி பேசினால் எனது தகுதி குறைந்துவிடும். அன்புமணி என்றால் அசிங்கம் என்று சன் நியூஸுக்கு ராமதாஸ் அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேசினார்.
தமிழ்நாட்டில் மிக முக்கியமான போராட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர். தருமபுரியில் 3 மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்றது அதிமுக. 3 மாணவிகளை எரித்த 3 பேரை விடுதலை செய்த அதிமுக, பாஜகவுடன் கரம் கோர்த்துள்ளார் அன்புமணி; நாடு முழுக்க இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் அன்புமணி கூட்டணி. அதிமுக, பாஜகவுக்கு கூஜா தூக்கி தமிழ்நாட்டுக்கும் ராமதாஸுக்கும் துரோகம் செய்தவர் அன்புமணி.
என்.டி.ஏ. கூட்டணியை துரோக கூட்டணி என்று தருமபுரி மட்டுமல்ல, தமிழ்நாடே சொல்கிறது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; சமூக நீதி கூட்டணி; 21 சமுகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டியது நான்தான். ரூ.8,000 கூப்பனில் தங்களுக்கு பிடித்த வீட்டு உபயோக பொருட்களை பெண்கள் வாங்கிக் கொள்ளலாம். 20 லட்சத்துக்கு அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன பம்புசெட்டுகள் வழங்கப்படும். முதியோர் உதவித் தொகை ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும். தெற்கு மீண்டும் தேய வேண்டும் என்பதுதான் ஒன்றிய பாஜக அரசின் திட்டம்.
தொகுதி மறுவரையறை நடத்துகிறோம் என்று சொல்லி போரை நடத்துகிறது பாஜக அரசு. தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் தொகுதி எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் பாஜகவின் கொட்டத்தை அடக்க வேண்டும். பாஜகவுக்கு தமிழ்நாடு கொடுக்கும் பதிலடியை வரலாற்றிலேயே மறக்கக் கூடாது. குனிந்தே பழகிய பழனிசாமிக்கு தமிழ்நாடு தலைநிமிர்வது பிடிக்கவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டு எதிராக நான் பேசுவதாக நாக்கில் நரம்பு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். பழனிசாமியின் உள்நோக்கம் தனது டெல்லி ஓனரான பாஜகவை காப்பாற்றுவதுதான் என்று கூறினார்.
