×

பழைய ஆயில் சேகரிப்பு குடோனில் திடீர் தீ

ஈரோடு,ஏப்.14: ஈரோட்டில் பழைய ஆயில் சேகரிப்பு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஈரோடு தண்ணீர்பந்தல் பாளையத்தில் சங்கர் (50) என்பவருக்கு சொந்தமான பழைய ஆயில் சேகரிக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு அருகே குப்பைகளுக்கு அடையாளம் தெரியாத நபர் நேற்று தீ வைத்ததாக தெரிகிறது. இந்த தீ மளமளவென காய்ந்த, செடி கொடிகளுக்கும், ஆயில் குடோனில் உள்ள பேரல்களுக்கும் மீது பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சிடியத்து தீயை அணைத்தனர். இதில், 4 பேரல்களில் சேகரிக்கப்பட்டிருந்த ஆயில்கள் தீயில் எரிந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Tags : Kudon ,Erode ,Erode Waterfront Camp ,Sankar ,
× RELATED தேர்தல் விதிமுறை மீறியதாக நாதகவினர் 4...