×

தேர்தல் பார்வையாளர் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று தெங்குமரஹாடா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு

ஊட்டி : குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொலைதூர குக்கிராமமான தெங்குமரஹாடா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊட்டி சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளராக தான்வி சுந்த்ரியல், கூடலூர் தொகுதி பார்வையாளராக ஹரீஷ், குன்னூர் தொகுதி பார்வையாளராக சுஹாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல் பார்வையாளராக லதா மனோஜ், செலவு கண்காணிப்பு பார்வையாளர்களாக கஜேந்திர சிங், வைபவ் மாதவ் ராவ், அஜித் டான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிாி – மேட்டுபாளையம் சாலையில் குஞ்சப்பனை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலை கண்காணிப்பு குழுவினரின் பணிகளை குன்னூர் தொகுதி பொது பார்வையாளர் சுஹாஸ் ஆய்வு செய்தார்.பின்னர், தெங்குமரஹாடா கிராமத்திற்கு சென்றார்.

முன்னதாக பரிசல் மூலம் மாயாற்றை கடந்து கிராமத்திற்குள் சென்று அங்கு தெங்குமரஹாடா,கல்லாம்பாளையம் பகுதிகளில் உள்ள 3 வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார்.

அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் வயதானவர்கள் சென்று வர வசதியாக சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Dengumarahada ,Tengumarahada ,Kunnur Assembly Constituency ,Tamil Nadu Assembly General Election ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து