×

தமிழ்நாட்டை உலக அளவில் ‘தனி பிராண்ட்’ ஆக வளர்த்தெடுக்க வேண்டும்: பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

ராமநாதபுரம் : தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

பரப்புரையில் முதல்வர் கூறியதாவது:

பல மதிப்பு மிக்க மனிதர்கள் இந்த மண்ணில் பிறந்தனர். சாதி மத வேற்றுமைகளை கடந்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்டம் இது. 2006ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ராமநாதபுரத்தை தண்ணீர் இல்லா காடு என்று சொல்வார்கள். கலைஞர் உத்தரவின்படி ராமநாதபுரத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்கினேன். அதற்கு ஏப்ரல் 23ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.  ராமநாதபுரத்தில் 100% வெற்றியை மக்கள் திமுக கூட்டணிக்கு கொடுக்க வேண்டும்.

1974ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு உப்புக் கழகம், மதகு அணை கட்டப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5,000 குடியிருப்புகளை கட்டிக் கொடுத்துள்ளோம். ரூ.2,819 கோடியில் சிறப்பு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் ரூ.99 கோடியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ரூ.3 கோடியில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் அறிவுசார் மையம், ராமேஸ்வரம், பாம்பம், மண்டபம் துறைமுகங்களில் மீன் இறங்கு தளம் அமைப்பு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகையை ரூ.8,000ஆக உயர்த்தி உள்ளோம். மீனவர்களுக்காக வீடும் கட்டும் திட்டத்தின் கீழ் 1,096 மீனவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி உள்ளோம். 3,000 மீனவர்களுக்கு கடனுதவி வழங்கியுள்ளோம். கச்சத்தீவை மீட்க தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். சொன்னதை உறுதியாக செய்வேன், சொல்லாததை அதிரடியாகச் செய்வேன். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற நிலையை தெற்கு வழிகாட்டுகிறது என்ற நிலையை உருவாக்கி உள்ளோம்.

தொகுதி மறுவரையறை என்ற அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்க பழனிசாமிக்கு துணிவு இருக்கிறதா..? மோடி, அமித் ஷாவையும் எதிர்த்து பேச வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி சைலன்ட் மோடுக்கு போய் விடுகிறார்.

அதிமுகவின் சாதனைகளை புள்ளிவிவரங்களோடு எடப்பாடி பழனிசாமி என்றைக்காவது பேசியிருக்கிறாரா..? மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பெண்களை கண்ணியமின்றி பேசுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறார். சாக்கடைக்கு சரி சமமாக பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டும் நாள்தான் ஏப்.23. கொள்கையற்ற துரோக கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.

உக்ரைன் போரை நிறுத்தினேன், அமெரிக்காவை அலற விட்டேன் என்று கூறிய மோடி இலங்கை கூட பேச சொன்னால் மவுனம் காக்கிறார். விஷ்வ குரு என கூறும் மோடி, இலங்கையிடம் பேசச் சொன்னால் மவுன குருவாக மாறிவிடுகிறார். தமிழ்நாட்டு மீனவர்களை, இந்திய மீனவர்களாக மோடி நினைத்திருந்தால் இப்படி துயரப்பட விட்டிருப்பாரா?

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் வரலாற்றில் நிற்கும் திட்டங்கள் அல்ல; வரலாற்றை படைக்கும் திட்டங்கள். தமிழ்நாட்டை பாதுகாப்பது திராவிட பெருஞ்சுவர். மேற்குவங்கத்தில் பாஜக விட்டுள்ள சவாலை, தமிழ்நாட்டில் விட முடியவில்லை.  பொது சிவில் சட்டம் வாக்குறுதியை தமிழ்நாட்டில் பாஜகவினால் அளிக்க முடியாது. தமிழ்நாட்டுக்கு வரிசைகட்டி வருகின்ற அமைச்சர்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக்கூறுகிறார்கள். தமிழ்நாட்டுக்குள் பாஜக நுழைய எடப்பாடி பழனிசாமி பல்லக்கு தூக்கியுள்ளார்.  ஜீரோ பாஜக இயக்கத்தை தொடங்கியுள்ளார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர்

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாட்சியே சாட்சி, துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி. கொடூர ஆட்சிக்கு கோடநாடு சம்பவமே சாட்சி. அதிமுகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு விழும் வாக்குகள் என முதல்வர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Paramakudi ,Chief Minister ,K. STALIN ,Ramanathapuram ,Tamil Nadu Assembly elections ,Dimuka ,President ,First Minister ,Mu. ,District ,
× RELATED சாதி மத வேற்றுமைகளை கடந்து அனைத்து...