வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் நிர்வாகிகள் பாதயாத்திரை

ஊட்டி,பிப்.21:  பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், இச்சட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்ந்து மத்திய அரசு அடம் பிடித்து வருகிறது. இந்நிலையில், இச்சட்டத்தை வாபஸ் பெறக் கோரி  நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊட்டி அருகே உள்ள அணிக்கொரை கிராமத்தில் பாதயாத்திரை அறப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்திற்கு ஊட்டி எம்எல்ஏ., மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். மாநில செயலாளரும், ஊட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மஞ்சூர் நாகராஜ் மத்திய அரசின் வேளாண் சட்டங்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.மாநில பொதுச்செயலாளர் விவேக் லஜபதி, மாநில செயலாளர் பிரியா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்மணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டாரத் தலைவர் உயிலட்டி ராமச்சிந்திரன் வரவேற்றார். தொடர்ந்து அணிக்கொரையில் இருந்து 5 கி.மீ தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. பாதயாத்திரையில் வட்டாரத்தலைவர்கள் சுரேஷ், நேரு, நகர தலைவர் கெம்ப்பையா,  தலைவர் சிவகுமார், மாவட்ட தலைவர்  சாஜி, மனித உரிமைப் பிரிவு தலைவர் மேலூர் நாகராஜ், மாவட்டத்தலைவர் மானேஸ்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர்கள், பொது செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>