×

எல்லா துறையிலும் ஃபெயில் ஆனது பாஜகவின் டப்பா என்ஜின்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சிவகங்கை: சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, காரைக்குடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; சிவகங்கை மண்ணுக்கு வரும்போதே எனது உடல் சிலிர்த்தது. காரைக்குடி என்றாலே காரமான சாப்பாடு, செட்டிநாடு உணவகங்கள் என பல்வேறு சிறப்பு கொண்டது. தாய் நாட்டிற்காக போராடிய மண் சிவகங்கை; திரும்பிய பக்கமெல்லாம் சிறப்புக்குரிய மாவட்டம் சிவகங்கை. தமிழின் தாய் மடி கீழடி இருக்கும் மண் சிவகங்கை; திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு ரெடியா?

இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் மண்ணில் இருந்து எழுத வேண்டும் என்ற சொல்ல வைத்திருக்கும் கீழடி; கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் தோழி விடுதி, மானாமதுரையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மீண்டும் முதல்வர் ஆவீர்கள், நான் அடுத்தக்கட்ட கோரிக்கைகளோடு உங்களிடம் வருவேன் எனக் கூறினார். பழனிசாமியிடம் வாய் மட்டும்தான் உள்ளது, சாதனைகள் இல்லை

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை ஏலம் எடுத்து முதலமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிசாமி; எல்லா பிரிவுகளிலும் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றியுள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் பின்னோக்கி போகிறது என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கடைந்தெடுத்த பொய்யை கூறியுள்ளார். இந்தியாவிலேயே அதிக பெண்கள் வேலை செய்யக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான். ஜவுளி, தோல் பொருள் உள்ளிட்ட ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஒன்றிய பாஜக அரசின் ஆய்வறிக்கையை கூட படிக்காமல் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள்ளார்.

கீழடி ஆய்வறிக்கையை ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்? இந்தியாவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு; 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி நடத்தினார்கள். அரசே குற்றவாளி கூண்டில் இருக்கக்கூடிய மாநிலங்களாக பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு பற்றி ஒன்றிய அமைச்சர்கள் பேசலாமா? மணிப்பூரில் இன்னும் கொடுமை நடக்கிறது; அதைக் கண்டு நெஞ்சம் நடுங்குகிறது. என்.டி.ஏ. ஆட்சியில் நீதிக்கோ, நிர்வாகத்துக்கோ எப்போதுமே இடம் இருக்காது.

பாஜக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை பற்றி பேசலாமா? திமுக ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத் தருகிறோம். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கவும் சட்டம் கொண்டுவந்திருக்கிறோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு வரை குற்றவாளிகளை பாதுகாத்ததுதான் அதிமுக ஆட்சி; காவலர்கள் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். விடியல் பயணத் திட்டத்தால் பெண்கள் திமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள்.

இதுவரை வாக்களிக்காதவர்களும் திமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள். புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். பெண்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. திமுகதான் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. சொன்னபடி டிவி, சிலிண்டர் கொடுத்த கலைஞரை போல், நானும் இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன். எட்டு ப்ளஸ் எட்டு, உதயசூரியனுக்குதான் ஓட்டு. நமது வெற்றியும் இந்த முறை யாரும் தொட முடியாத உயரத்துக்கு செல்லும். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500 உயர்த்தி வழங்கப்படும்.

எல்லா துறையிலும் ஃபெயில் ஆனது பாஜகவின் டப்பா என்ஜின். அதிமுகவே வென்றாலும் பாஜக ஆட்சிதான் அமையும். ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா எடப்பாடி பழனிசாமியின் என்.டி.ஏ. ஆட்சி வேண்டுமா? பாஜக ஆளும் மாநிலங்கள் போல் தமிழ்நாடு படுகுழிக்குள் செல்ல வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

Tags : BJP ,Chief Minister ,M.K. Stalin ,Sivaganga ,Tirupattur ,Manamadurai ,Karaikudi ,
× RELATED தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் 3...