×

மாவட்ட கிரிக்கெட் போட்டி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பரிசு வழங்கினார்

உடன்குடி,பிப்.21: உடன்குடியில் நடந்த மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பரிசு வழங்கினார். திமுக மாநில இளைஞரணிசெயலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடன்குடியில் மாவட்ட அளவில் நடந்த லெதர்பால் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கொம்புத்துறை அணிக்கு ரூ.1லட்சம் பரிசு, வெற்றிக்கோப்பையை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார். மாவட்ட அளவில் 136அணிகள் கலந்து கொண்ட லெதர்பால் கிரிக்கெட் போட்டி உடன்குடி மின்வாரிய மைதானத்தில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா தண்டுபத்தில் உள்ள தெற்கு மாவட்ட தலைமையகத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்து போட்டியில் முதலிடம் பெற்ற கொம்புத்துறை சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.1லட்சம், 2வது இடம் பெற்ற திருச்செந்தூர் கசம்கட்டி அணிக்கு ரூ.50ஆயிரம், 3வது இடம் பெற்ற ஆறுமுகநேரி டிசிடபிள்யு அணிக்கு ரூ.30ஆயிரம், 4வதுஇடம் பெற்ற திருச்செந்தூர் ரகுமான் அணிக்கு ரூ.20ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பைகளை வழங்கினார்.
யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலாளருமான பாலசிங் வரவேற்றார். சிறந்த ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப் பட்ட அஜின், லெவின், மாயாண்டி ஆகியோருக்கு தலா ரூ.2ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

விழாவில் மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர் அணி மகாவிஷ்ணு, வழக்கறிஞர் ஜெபராஜ், மகளிரணி ஜெசிபொன்ராணி, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் வர்த்தகஅணி ரவிராஜா, இளங்கோ, மாணவரணி முகைதீன், கலைஇலக்கியஅணி ராஜபாண்டியன், மாணவரணி அமிர்தாமகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆழ்வை கிழக்கு நவீன்குமார், திருச்செந்தூர் ரமேஷ், நகரசெயலர்கள் திருச்செந்தூர் சுடலை, உடன்குடி ஜான்பாஸ்கர், நாசரேத் ரவிசெல்வகுமார், முருகப்பெருமாள், முத்துவீரப்பெருமாள், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், திருச்செந்தூர் விளையாட்டு கழகங்களின் செயலர் நிர்மல்பிரபு, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், உடன்குடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : District Cricket Tournament ,Anita Radhakrishnan ,MLA ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...