- சென்னை
- பொலிஸ் ஆணையாளர்
- அருண் சங்கம்
- ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக்
- அமலாக்கத் துறை
- தேர்தல் ஆணையம்
- எடிஜிபி
- அபின் தினேஷ் மோடக்
- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்
- சென்னை பொலிஸ்
சென்னை: சென்னை காவல் ஆணையர் அருணை மாற்றம் செய்துள்ள தேர்தல் ஆணையம், புதிய காவல் ஆணையராக அமலாக்கத்துறை ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக்கை நியமனம் செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை காவல் ஆணையர் அருணுக்கு பதிலாக அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அருண் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதற்கு முன்னர் தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலராக சாய்குமார் நியமிக்கப்பட்டார். அதேபோல் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டார் .
மேலும் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
