×

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ் மாநில தேசிய லீக் கட்சி ஆதரவு

சென்னை: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், ‘தமிழ் மாநில தேசிய லீக்’ கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளான மாநில அமைப்புச் செயலாளர் சம்சுதீன், சென்னை மாவட்ட செயலாளர் கே.அல்லாபகஷ், தென்சென்னை மாவட்ட செயலாளர் திருவான்மியூர் எம்.ஹாஜா, இளைஞர் அணிச் செயலாளர் திருவான்மியூர் ரிஸ்வான் ஆகியோர் நேரில் சந்தித்து, நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ‘தமிழ் மாநில தேசிய லீக்’ கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதோடு, அவர்களின் வெற்றிக்கு ‘தமிழ் மாநில தேசிய லீக்’ கட்சி நிர்வாகிகள் – தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu National League ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,DMK ,Anna Arivalayam, Chennai ,general secretary ,Tirupur Altaf ,State Organizing Secretary ,Shamsudeen ,Chennai District… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து