×

கலகலப்பு 3 படத்திற்கு வாங்கிய முன்பணம் ரூ.1.81 கோடி சுந்தர் சி மோசடி: கமிஷனர் தயாரிப்பு நிறுவனம் புகார்

சென்னை: இயக்குனர் சுந்தர் சி. பண மோசடி செய்துள்ளதாக வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் கலகலப்பு 3 என்ற படத்தை தயாரிப்பதற்கு கொடுத்த முன்பணம் ரூ.1 கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்தை சுந்தர் சி மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. இதன் உரிமையாளரான மணிகண்ட ராமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிறுவனம் வல்லான் என்ற படத்தை மணி செய்யோன் இயக்கி சுந்தர் சி நடித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி வெளியிட்டது. குறிப்பாக கலகலப்பு 1 மற்றும் கலகலப்பு 2 ஆகிய படத்திற்கு ரூ.5 கோடி சுந்தர் சி சம்பளம் கேட்டதாகவும் ஒவ்வொரு படத்தையும் ரூ.20 கோடி பட்ஜெட்டில் முடித்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அரண்மனை நான்காம் பாகம் வெற்றியடைந்ததையடுத்து தனது சம்பளத்தையும் படத்திற்கான பட்ஜெட்டையும் அதிகரித்ததால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சுந்தர் சிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கலகலப்பு மூன்றாம் பாகம் படத்திற்கு அதிக சம்பளம் மற்றும் படத்திற்கான பட்ஜெட்டை அதிகம் கேட்டதால் வி.ஆர்.டெல்லா தயாரிப்பு நிறுவனம் கடந்த 2024 அக்டோபர் மாதம் கலகலப்பு மூன்றாம் பாகத்தை தயாரிப்பதிலிருந்து பின்வாங்கியது. இதுவரை இந்த படத்திற்காக சுந்தர் சிக்கு அளிக்கப்பட்ட ஒரு கோடியே 14 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணமும், நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் நடிகர் விமலுக்கு மொத்தமாக கொடுத்த ரூ.66 லட்சத்து 25 ஆயிரம் என ஒரு கோடியே 81 லட்சத்தி 15 ஆயிரம் ரூபாய் முன் பணத்தை தயாரிப்பு நிறுவனம் திருப்பி கேட்டுள்ளது. ஆனால் அதை தராமல் இயக்குனர் சுந்தர் சி மிரட்டுவதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sundar C ,Chennai ,Chennai Police ,V.R.Della Film Factory ,Sundar C. ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை