×

அஜித் பவார் மகன் எம்பியாக பதவி ஏற்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பார்த் அஜித் பவார் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மறைந்த அஜித் பவார், தற்போதைய துணை முதல்வர் சுனேத்ரா பவார் தம்பதியின் மூத்த மகன் பார்த் அஜித் பவார். இவர் அண்மையில் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேசியவாத காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பார்த் அஜித் பவாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வின்போது அவரது தாயார் சுனேத்ரா பவார், பாஜ மாநிலங்களவை தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பல கட்சி தலைவர்கள் மற்றும் செயலகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Ajit Pawar ,New Delhi ,Maharashtra ,Rajya Sabha ,Chief Minister ,Deputy Chief Minister ,Sunetra Pawar.… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...