×

ம.பி. உ.பியை இணைக்கும் ரேவா பாலத்தில் விரிசல்: ஏப்.30 வரை கனரக வாகனங்களுக்கு தடை

ரேவா: மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் ஓடும் பிஹாத் ஆற்றின் மேலே பாலம் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட தலைமையகத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த மேம்பாலம் சுமார் 20 வருடங்களுக்கு முன் கட்டப்படடது. இது அண்டை மாநிலமான உ.பிக்கு செல்ல முக்கிய வழித்தடமாகும்.

இந்த பாலத்தில திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு நாள்களுக்கு முன் ரேவா பாலம் மூடப்பட்டு, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ், வாரணாசிக்கு செல்லும் கனரக வாகனங்கள் மைஹார்-சத்னா-சித்ரகூட் வழியாக திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் இந்த பாலத்தில் வரும் 30ம் தேதி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : M. ,U. ,REWA ,Bihad River ,Rewa, Madhya Pradesh ,U. Go ,Pi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...