- துவில்
- மதுரை
- Duweiler
- மதுரை யா
- . முஸ்தகு
- முனியசாமி
- தேதம்பட்டி
- ஓதக்காட்
- மோகன்
- மதுரை யக்கப்பா
- ஸ்டாலின்
- பெருமால்பட்டி
- மாலூர்
மதுரை: மதுரை அருகே டூவீலரில் சென்ற இளைஞர்கள் இருவரை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மதுரை யா.ஒத்தக்கடை அருகே தேத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கடுகு (எ) முனியசாமி (24), மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த மோகன்(25), மேலூர் அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின்(26) ஆகிய மூவரும் ஒரே டூவீலரில் நேற்று மாலை ஒத்தக்கடை பகுதியில் சென்றனர். பட்டணம் கிராமப்பகுதி அருகே சென்றபோது, அவ்வழியாக காரில் வந்த மர்ம நபர்கள், டூவீலரை வழிமறித்து 3 பேரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர்.
இதில், பலத்த காயமடைந்த கடுகு என்ற முனியசாமி, மோகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி தகவலறிந்து வந்த ஒத்தக்கடை போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த மற்றொரு நபரான ஸ்டாலின். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது : ஒத்தக்கடை பட்டணம் கிராமத்தில் கடந்த 3ம் தேதி அங்குள்ள விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில், மேட்டுபட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பு என்பவர் செருப்பு அணிந்து வந்ததற்காக, அவரை பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த சக்திமுருகன், அருள் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். இதுபற்றி முத்துக்கருப்பு தனது நண்பர்களான தேத்தாம்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின், சவுந்தர் ஆகியோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் பட்டணம் கிராமத்துக்குச் சென்று, முத்துக்கருப்பை தாக்கியதற்காக வசந்த் என்பவரை வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற பொட்டுக்கடலை பெரியசாமி, அதே பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன், சபரிராஜன், அருள், ஆகியோர் காரில் சென்று, கடுகு என்ற முனியசாமி உட்பட 3 பேரையும் வெட்டியுள்ளனர். இதில் 2 பேர் பலியாயினர். சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர். இவ்வாறு கூறினர்.
