×

16 ஆண்டுகளாக தலைமைறைவாக இருந்த பாகிஸ்தான் தீவிரவாதி கைது

ஸ்ரீநகர்: காஷ்மீர் போலீசார் மற்றும் ஒன்றிய புலனாய்வு பிரிவினர் ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 19 இடங்களில் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர். இதில், ஏகே ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர். இந்த சோதனையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு தளவாடங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வந்த பெரிய சதி அம்பலமானது. இந்த சோதனையில், பாகிஸ்தான் தீவிரவாதி அப்துல்லா என்ற அபு ஹோரைரா,இன்னொரு பாக். தீவிரவாதி உஸ்மான் என்ற குபைப் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான 5 பேர்களில் 3 பேர் ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள். இவர்கள் தீவிரவாதிகளுக்கு தங்க இடம் மற்றும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், தீவிரவாதி அபு ஹோரைரா 16 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்து பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார். 16 ஆண்டுகள் காஷ்மீருக்கு வெளியே தலைமறைவாக இருந்த அபு ஹோரைரா தற்போது போலீஸ் வலையில் சிக்கி உள்ளார் என்றனர்.

Tags : Srinagar ,Kashmir Police ,Union Intelligence Unit ,Rajasthan ,Ariana ,AK ,Lashkar ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...