×

தமிழ்நாடு வளரக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர்; 7வது முறையாக திமுக அரசு அமைய உங்க வீட்டு மாப்பிள்ளையாக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். முதலமைச்சர் ஆவதற்கு முன்பே நான் உங்க ஊரு மாப்பிள்ளை. இப்போது மருமகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு அழகான சான்று நாகை மாவட்டம்தான்.

நாகையில் நியோ டைடடல் பூங்கா, தோழி விடுதி கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர், இளைஞர், உழவர் இப்படி யாரையும் விடாமல் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். கன்டன்ட் இல்லாமல் தினமும் கண்டதையும் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி; தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமியின் தரம் கீழே கீழே சென்று கொண்டிருக்கிறது. தன்னையும் தனது கட்சியையும் மக்களிடம் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி

அவதூறு பேச்சுகளால் தன்னையும் தனது கட்சியையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி; பாஜக அரசின் தொகுதி மறுவறையரையால் தென் மாநிலங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்க உள்ளது. தொகுதி மறுவரையறையால் வடமாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை உயரும். தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை. தொகுதி மறுவரையறை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவையும் பழனிசாமியையும் குத்தகைக்கு எடுத்துள்ளது பாஜக. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் குரல் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி, வேறு எதற்கு குரல் கொடுப்பார்? அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி கூறுபோட்டு விற்பனை செய்திருப்பார். வரி கட்டுவதற்கு மட்டும் தமிழ்நாட்டின் பணம் வேண்டும், ஆனால் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் கிடையாது. தமிழ்நாடு வளரக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்; தமிழ்நாடு என்னும் இந்தியாவின் வளர்ச்சி எஞ்சினை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு பட்டை, நாமம்தான் போடுகிறது பாஜக.

மதுரையில் பாஜக எம்.எல்.ஏ. வெற்றிபெற்றால் மெட்ரோ திட்டம் வரும் என பட்னவிஸ் கூறுகிறார் மதுரை மெட்ரோவுக்கும் மராட்டிய முதல்வர் பட்னவிஸுக்கும் என்ன சம்பந்தம்? ரயில்வே துறை அமைச்சரா தேவேந்திர பட்னவிஸ்? பிளாக் மெயில் செய்ய மராட்டிய முதல்வர் பட்னவிஸுக்கு வெட்கமே இல்லையா? தேவேந்திர பட்னவிஸ் பேச்சு பற்றி எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து பேசுவாரா? இந்தியா முழுவதும் பாஜக அரசு கட்டிய பாலங்கள் எல்லாம் இடிந்து விழுங்கின்றன. ரூ.6,300 கோடி மதிப்பில் ஒன்றிய அரசு கட்டிய பாலம் உள்வாங்கியுள்ளது. ஊழலும் பொறுப்பின்மையும் நிறைந்த அரசுதான் ஒன்றிய பாஜக அரசு;

பாஜகவின் ஒரே நோக்கம் தமிழ்நாடு வளரக்கூடாது என்பதுதான். மே 4 கல்யாண நாள் என்றால் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாள் நிச்சயதார்த நாள்; தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாள்தான் வெற்றிக்கு நிச்சயதார்த்தம் செய்த நாள். திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியே சிக்சர்தான். குடும்பத் தலைவிகளின் சுமையைக் குறைக்கவே இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ.8000 கூப்பன் வழங்கப்படுகிறது. ரூ.8,000 கூப்பனில் உங்கள் சாய்ஸ்படி தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். சொன்னபடி இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன்.

கலைஞர் சொன்னபடி தொலைக்காட்சியும், கேஸ் அடுப்பும் கொடுத்தது போல இல்லத்தரசி திட்டத்தை நான் நிறைவேற்றுவேன். 2016 தேர்தல் அறிக்கையில் செல்போன் தருவதாக அதிமுக கூறியது, யாராவது செல்போன் வாங்கினீர்களா? மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும். நாகையைச் சேர்ந்த 1 லட்சம் இளைஞர்களுக்கு உணவு பதப்படுத்தும் துறையில் பயிற்சி வழங்க உள்ளோம். குடிசைகளே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று கூறினார்.

Tags : BJP ,Tamil Nadu ,Chief Minister MLA K. ,Stalin ,Mayiladudhara ,Chief Minister MLA MLA ,Secular Progressive Alliance Party ,CPDP ,K. Stalin ,Sirkazhi ,Dani ,Bombukar ,Nagai ,Kielvellur ,Vedaranyam ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஐந்தாண்டுகால...