×

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கள் வியாபாரி மணிகண்டனை சுட்டுப் பிடித்தது போலீஸ்

 

 

தென்காசி: ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கள் வியாபாரி மணிகண்டனை போலீஸ் (32) சுட்டுப் பிடித்தது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் பதனீர் விற்பனை சூடுபிடித்து வருகிறது. அப்போது ஒருசில வியாபாரிகள் பதனீருடன் சேர்ந்து கள்ளையும் இறக்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் ஒருவர் கள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி துரை மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது கள் விற்பனை தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மணிகண்டன் தாக்க முயற்சி செய்துள்ளார்.

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றபோது தற்காப்புக்காக சுட்டதில் மணிகண்டன் காயம் அடைந்தார். போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் அடைந்த மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயம் அடைந்த இளைஞர் மணிகண்டன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Maruthambuthur ,Alankulam ,Tenkasi ,Manikandan ,Tenkasi district ,Padaneer ,
× RELATED அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம்...