×

ஒரே இரவில் எங்களால் ஒட்டுமொத்த நாட்டையும் அழிக்க முடியும்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: அடுத்த 24 மணிநேரத்தில் ஹார்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் பாலங்கள், மின்சார கட்டமைப்புகள் அனைத்தும் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஒரே இரவில் எங்களால் ஒட்டுமொத்த நாட்டையும் அழிக்க முடியும். அது நாளை இரவாகக் கூட இருக்கலாம் என மிரட்டல் விடுத்தார். ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மின் கட்டமைப்புகள், பாலங்கள் தகர்க்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டிரம்ப் விடுத்த கெடு முடிவடைய நிலையில், மின்கட்டமைப்புகளை பாதுகாக்க இளைஞர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே அதி நவீன ஏவுகணைகளை குவித்து தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், ஈரானின் பதிலடி நடவடிக்கையால் அங்கு உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு இறுதி கெடு விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்காவிட்டால் அந்த நாட்டை ஒரே நாளில் தகர்த்துவிடுவேன் எனவும் ஈரானில் உள்ள எண்ணெய் வளங்களை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் கூறினார்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை நாங்களே கட்டுப்பாட்டில் எடுத்து அதற்கு சுங்க வரிகளை வசூலிப்போம் என்றும் டிரம்ப் அதிரடியாக தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இன்று(07-04-2026) ஈரானின் மின் சக்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த ஈரான், பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறியது.

Tags : America ,Iran ,Washington ,US ,President ,Trump ,Strait of Hormuz ,
× RELATED அமெரிக்க அதிபர் பதவி முடிந்த பிறகு...