×

கரூர் அருகே அரசு பஸ்-வேன் மோதல்: 6 பேர் காயம் நெல்கொள்முதல் நிலையம் செயல்படாததை கண்டித்து விவசாயிகள் பஸ்சை மறித்து போராட்டம்

கரூர், பிப். 19: கரூர் மாவட்டம் மாயனூர் அருகே நெல்கொள்முதல் நிலையம் செயல்படாததை கண்டித்து ஆத்திரமடைந்த விவசாயிகள் பஸ்சை மறித்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், மாயனூர் அருகேகோவக்குளம் பகுதியில் ஆண்டு தோறும் நுகர்ப்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பகுதியை சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். இந்தாண்டு ஜன.15ம்தேதி முதல் பிப்ரவரி வரை நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய அதிகாரிகள் வராத காரணத்தினால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மேலும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இதனால் தேக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கோவக்குளத்தில் பழைய ஜெயங்கொண்டம் கிருஷ்ணராயபுரம் சாலையில் நேற்று காலை 10 மணியளவில் அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் பிற வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற மாயனூர் போலீசார் மற்றும் அதிகாரிகள், விவசாயிகளிடமும், நுகர்ப்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, விரைந்து இந்த பிரச்னை சரி செய்யப்படும் என கூறியதையடுத்து, விவசாயிகள் அங்கிருந்து கிளம்பினர். இதனால், இப்பகுதியில் நேற்று காலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Government bus-van collision ,Karur ,paddy procurement center ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...