×

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஊத்தங்கரை, ஏப். 6: ஊத்தங்கரை அடுத்த நாட்டாண்மை கோட்டையில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், முளைப்பாரி மற்றும் பால் குடம் எடுத்து வந்து மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் மாரியம்மன் ஊர்வலம் ெசன்று, கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டார் கங்காதரன், கோயில் பூசாரி சின்னராஜ், வார்டு உறுப்பினர் மோகன் மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்

 

Tags : Mariamman ,Temple ,Kumbabhishekam ,Uthankarai ,Mariamman Temple ,Nattanmai Fort ,
× RELATED ஓட்டல்களில் உணவு கிடைக்காமல் அவதி