×

இளம்பெண் மாயம்

கிருஷ்ணகிரி, ஏப். 6: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கடவரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் துருவப்பா. இவரது மகள் சந்தியா (25). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.  கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தியா, பின்னர் வீடு திரும்பவில்லை. தோழிகள், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வேப்பனஹள்ளி போலீசில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியாவை தேடி வருகின்றனர்.

 

Tags : Krishnagiri ,Dhruvappa ,Kadavarapalli village ,Veppanahalli ,Krishnagiri district ,Sandhya ,
× RELATED மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்