×

ஓட்டல்களில் உணவு கிடைக்காமல் அவதி

ராயக்கோட்டை, ஏப். 6: பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதியிலிருந்து சேலம், தர்மபுரி நோக்கி செல்லும் பயணிகளும், சேலம் மற்றும் தர்மபுரி பகுதியிலிருந்து ஓசூர், பெங்களூரு செல்லும் பயணிகள் ராயக்கோட்டையில் வாகனங்களை நிறுத்திவிட்டு ராயக்கோட்டையில் காலை, மதியம் உணவு சாப்பிட்டு விட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், வணிக உபயோக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், பெரும்பாலான ஓட்டல்கள், டீக்கடைகளை மூடியுள்ளனர்.

ஒரு சிலர் மட்டும் மின்சாரத்தால் இயங்கும் அடுப்புகளை வாங்கி, டீக்கடையை நடத்தி வருகின்றனர். இதனால், ராயக்கோட்டை வழியாக செல்லும் பயணிகள், உணவு கிடைக்காமல் பட்டினியாக செல்கின்றனர். ராயக்கோட்டையில் உணவு கிடைக்கவில்லை என்றால், 25 கி.மீ தூரத்திலுள்ள பாலக்கோடு, 50 கி.மீட்டரில் உள்ள தர்மபுரி, 35 கி.மீட்டரில் உள்ள ஓசூருக்குதான் செல்ல வேண்டும். விறகு அடுப்புகளை பயன்படுத்தும் மிலிட்டரி ஓட்டல்களில், சாப்பிடுவதை சைவ உணவை சாப்பிடுபவர்கள் தவிர்க்கின்றனர்.

 

Tags : Rayakottai ,Bengaluru ,Hosur ,Salem ,Dharmapuri ,
× RELATED மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்