×

மணப்பாறையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

மணப்பாறை, ஏப்.6: மணப்பாறையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மத்தியில் அமைந்திருக்கும் மிகபழமை வாய்ந்த கிறிஸ்தவ பேராலயம் புனித லூர்து அன்னை ஆலயம். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு மணப்பாறை மறை வட்ட அதிபர், பங்கு தந்தை தாமஸ் ஞானதுரை, லூயிஸ் பிரிட்டோ ஆகியோர் தலைமையில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தேவாலயம் முழுவதும் இருள் நிரம்பி, கிறிஸ்துவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திa ஆண்டவரின் உயிர்ப்புக்காக ஜெபித்தனர், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் தேவ தூதன் இயேசுபிரான் உயிர்த்தெழுந்து வந்ததாக இயேசுவின் திருவுருவச்சிலை திறக்கப்பட்டது. பேராலயம் முழுவதும் மின் விளக்குகள் ஜொலித்தன. மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியினை கிறிஸ்துவ பொதுமக்கள் பங்கு பெற்றனர். ஈஸ்டர் என்றால் வசந்தகாலம் என்றும் பொருள் உண்டு. தேவதூதனின் உயிர்தெழுந்த வசந்தகாலத்தை வரவேற்று தங்களது ஈஸ்டர் தின மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். பின்னர் திருமுழுக்கு புனித நீர் புனிதம் செய்யப்பட்டு அனைவர் மீதும் தெளிக்கப்பட்டது.

 

 

Tags : Easter ,Manapparai ,Trichy district ,Holy Lourdes Church ,Jesus Christ… ,
× RELATED மண்ணச்சநல்லூர் அருகே வாகன சோதனையில் ரூ.1,33,500 பறிமுதல்