×

மண்ணச்சநல்லூர் அருகே வாகன சோதனையில் ரூ.1,33,500 பறிமுதல்

சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பதில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தீவிரமாக செயல்பட துவங்கி உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் பறக்கும் படை, நிலைக்குழு, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலம் பகுதியில் அருகே வினோதா தலைமையிலான தேர்தல் குழு பறக்கும் படை நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக துறையூர் அடிவாரம் பழனிமுருகன் ரைஸ்மில் பகுதியை சேர்ந்த கௌதம்குமார் என்பவர் எவ்வித முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பெற்ற ரூ. 1,33,500 ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஷ்கண்ணனிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Mannachanallur ,Election Commission ,
× RELATED மணப்பாறையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்