×

சைதை தொகுதியில் அனைத்துத் தெருக்களிலும் நடந்தே சென்று சாதனைகளை விளக்கிக்கூறி மா.சுப்பிரமணியன் ஓட்டு சேகரிப்பு: விதவிதமான மாலைகளை அணிவித்து பொதுமக்கள் வரவேற்பு

சென்னை: சைதை தொகுதியில் அனைத்துத் தெருக்களிலும் நடந்தே சென்று சாதனைகளை விளக்கிக் கூறி மா.சுப்பிரமணியன் ஓட்டு சேகரித்தார். அப்போது விதவிதமான மாலைகளை அணிவித்து பொதுமக்கள் வரவேற்றனர். சைதாப்பேட்டை சட்டமன்று தொகுதிக்குபட்ட 172 அ வட்டமான வேளச்சேரி சாலை கன்னிகாபுரம் 1வது தெரு முதல் 34வது தெரு வரை, ஐந்து பர்லாங் சாலை, மாந்தோப்பு 1 மற்றும் 2 தெருக்களிலும், அதனைத் தொடர்ந்து சாத்தானிப்பேட்டை 1 மற்றும் 2 தெருக்கள், மதுரை வீரன் கோயில் தெரு, செங்கேணியம்மன் 1 மற்றும் 2 தெருக்களின் காலை 7 மணி முதல் சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நடந்தேச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்து வருகிறார். அப்போது பொதுமக்கள் விதவிதமான மலர்களாலும், பழங்களாலும் மாலை செய்து அவருக்கு அணிவித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். அப்போது பொதுமக்களிடம் சைதாப்பேட்டையில் வார்டு வாரியாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களான 172வது வார்டுக்குட்பட்ட ஐந்து பர்லாங் சாலையில் ரூ.3.64 கோடி செலவில் ஆரம்பப் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

பொதுக்கழிப்பிடங்கள் ரேஸ் கோர்ஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் ரூ.18 லட்சத்திலும், ஐந்து பர்லாங் சாலையில் ரூ.25.86 லட்சத்திலும் கட்டப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மடுவின்கரையில் ரூ.35 லட்சத்தில் நீத்தார் நினைவு மண்டம், மெயின்ரோடு, 172வது வார்டு ராதாமோகன் தெரு, வண்டிக்காரன் தெரு, ராஜ்பவன் காலனி, வேளச்சேரி செங்கேணியம்மன் கோயில் தெரு. பிள்ளையார்கோயில் தெரு, புது தெரு, ஐந்து பர்லாங் சாலை, நேதாஜி சாலை ஆகியவற்றில் 4.93 கி.மீ. மழைநீர்வடிகால்வாய் ரூ.28.10 கோடியிலும், அதேபோல் சக்கரபாணி சாலையில் உள்ள மேம்பாலம் ரூ.1.62 கோடி செலவில் அழகுப்படுத்தப்பட்டிருக்கிறது. ரேஸ் கோர்ஸ் சாலை விரிவாக்கப் பணி சிறப்புத் திட்டத்திற்கு ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.10 லட்சம் செலவில் மசூதி காலனி 1வது குறுக்குத் தெருவில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மசூதி காலனியில் கழிவுநீர் உந்து நிலையம் அமைத்தல், 1.7 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் உந்துகுழாய் பதிக்கும் பணிகள் ரூ.3.27 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கன்னிகாபுரம் பகுதியில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 5.30 லட்சம் செலவில் நியாயவிடைக் கடை அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.9.31 லட்சம் செலவில் 172வது வார்டு ஐந்து பர்லாங்கு சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இன்னும் ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்து சைதாப்பேட்டையை தொழில்கள் சிறந்துவிளங்கும் நகரமாக்கிடுவோம்.

வேலைவாய்ப்பைப் பெருக்கிடுவோம், சைதாப்பேட்டையை சிறந்த நகரமாக்க ஒத்துழைப்பை நல்கிடுவீர் என்று மா.சுப்பிரமணியன் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குச் சேகரித்தார்.இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் இரா.துரைராஜ், ம.ஜேக்கப், காங்கிரஸ் – ஜோதிபொன்னம்பலம், வி.சி.க. மகேஷ், பாண்டுரங்கன், தே.மு.தி.க. வி.சி.ஆனந்தன், ஈகை ஆர்.சுரேஷ், வாட்டர்வாஷ் டி குமார். சி.பி.எம். சுந்தர் ஜுலி ஜோசப், ஐ.யூ. எம்.எல் – எஸ்.டி.பி.ஐ. – ம.நீ.ம. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Saitai block ,Subramanian Driving ,Chennai ,Saitai ,Superman ,Kannikapuram 1st Street, Velacheri Road, 172a Circle, Saithappettai Constituency ,
× RELATED தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில்...