×

ஊருக்குள் நுழைந்த 4 காட்டு யானைகள்

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்து வாகனத்தை பயன்படுத்தி காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை சிமிட்டஹள்ளி கிராமத்தில் 4 காட்டு யானைகள் விவசாய விளைநிலங்களில் நடமாடுவதை கண்ட கிராம மக்கள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் 4 காட்டு யானைகளை சுமார் ஒரு மணி நேரம் போராடி வனத்திற்குள் விரட்டியடித்தனர். அப்போது காட்டு யானைகள் தார் சாலையை கடந்து விளை நிலங்கள் வழியாக வனப்பகுதி நோக்கிச் சென்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை தடுக்க அகழி வெட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sathyamangalam ,Talawadi ,Erode district ,
× RELATED கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: ஸ்ரீவில்லி. பால்கோவா விலை கிடுகிடு