×

அனைத்து தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை

 

சென்னை: அனைத்து தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக, எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகளை வழங்கியுள்ளது. மீதியுள்ள 164 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. அதே நேரத்தில் மதிமுக 4, மமக 2, கொமதேக 2, எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 12 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதன் மூலம் 176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது. இந்நிலையில் அனைத்து தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், பகுதி, நகரம், ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்குகிறார்.

 

Tags : Chief Executive ,K. ,Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Assembly ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி...