×

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பெண் பலி

மனடோ: இந்தோனேசியாவின் டெர்னேட் அருகே வடக்கு மொலுக்கா கடலை மையமாக கொண்டு சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை முகமையின் தகவலின்படி வடக்கு சுலவேசி மாகாணத்தின் பிடுங் பகுதியிலும், அண்டை மாகாணமாக வடக்கு மலுக்குவின் டெர்னேட் நகரிலும் 10 முதல் 20 விநாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் டெர்னேட் நகரின் சில பகுதிகளில் ஒரு தேவாலயம் மற்றும் 2 வீடுகள் உட்பட சில கட்டிடங்கள் லேசானது முதல் கடுமையான வரையிலான சேதங்கள் ஏற்பட்டது. இங்கு 3 பேர் காயமடைந்தனர்.பிடுங் நகரில் சேத மதிப்பீட்டு பணிகள் நடந்து வருவதால் உடனடி தகவல் இல்லை. வடக்கு சுலவேசியின் மனடா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்தததில் 70வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில மணி நேரங்களில் அது திரும்ப பெறப்பட்டது.

Tags : Indonesia ,Manado ,northern Molucca Sea ,Ternate, Indonesia ,US ,Disaster Management Agency ,North Sulawesi ,
× RELATED அட்டாக் லிஸ்ட்டில் இல்லாத அமேசான்...