×

படிக்கட்டில் அபாய பயணம் கூடுதல் பஸ் இல்லாமல் மாணவர்கள் அவதி

விருதுநகர், பிப்.19: விருதுநகர் கோட்டத்தில் இயக்கப்படும் டவுன்பஸ்கள் அனைத்து 10 ஆண்டுகள் பழமையான பஸ்களாக உள்ளன. அனைத்து டவுன்பஸ்களும் பழுதடைந்த நிலையில் இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுவதால் மாணவ, மாணவியர் டவுன் பஸ்களில் அபாயகரமான நிலையில் தொங்கியபடி பயணிக்கின்றனர். படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் போது பிடிமானம் தளர்ந்தும், பக்கவாட்டில் வரும் வாகனங்களாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் டி.கல்லுப்பட்டி, சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : stairs students ,
× RELATED கார் மோதி 3 பேர் காயம்