சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2400 குறைந்தது. இதே போல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிந்தது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி 2.55 லட்சத்துக்கும் விற்பனையானது. நேற்று மாலையும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.13,750க்கும், பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு ஆறுதலை அளித்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.255க்கும், பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது.
