காங். வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம்

நெல்லை, பிப். 18: நெல்லை மாநகர் மாவட்ட காங். அலுவலகத்தில் தென்மண்டல வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். இணை தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாநில துணை தலைவர் பால்ராஜ், மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர்கள் (கன்னியாகுமரி கிழக்கு) ஜவகர், சிவனுபாண்டியன், (குமரி மேற்கு) ஜேசுராஜா, (தென்காசி) சக்ரவர்த்தி, (தூத்துக்குடி ெதற்கு) பெலிக்ஸ், வக்கீல்கள் துரை செந்தில்குமரன், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் 28ம் தேதி நெல்லைக்கு வருகை தரும் ராகுல்காந்தி எம்பிக்கு வழக்கறிஞர் பிரிவு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>