×

காது பகுதியில் ரத்தத்துடன் சாலையில் நின்ற காட்டு யானை

கூடலூர், ஜன. 18:  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியில் காட்டு யானை ஒன்று  சுற்றி வருகிறது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து விரட்டும்  பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று காலை மசினகுடி அருகே சிங்கார சாலையில் அந்த யானை 3 மணி நேரமாக நின்றது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நேற்று காலை சிங்கார துணை மின் நிலைய ஊழியர்கள், தனியார் தங்கும்  விடுதி பணியாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர்.
இதனையடுத்து  வனத்துறையினர் அங்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த யானை கடந்த டிசம்பர் மாதம் உடலில் காயத்துடன் திரிந்தது. அதற்கு சிகிச்சை  அளிக்கப்பட்டது.

யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் அது மீண்டும்  மீண்டும் சாலை பகுதிக்கு வந்து விடுகிறது. இதன் காரணமாக யானையை  வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதுவரை யானையால்  பொதுமக்களுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் அந்த யானை நேற்று மாலை  மீண்டும் சாலைக்கு வந்துள்ளது.

யானையின் வனத்துறையினர் கண்காணித்தபோது அதன் காது பகுதி கிழிந்து ரத்தம் வடிந்தது தெரிந்தது. இதை  கண்காணித்த வனத்துறையினர், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் அடங்கிய  குழுவினர் மூலம் பப்பாளிப்பழத்தில் மருந்து மாத்திரைகள் வைத்து யானைக்கு  வழங்கியுள்ளனர். தொடர்ந்து யானை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : road ,ear area ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி