×

பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு இன்று மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஒரேநாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மாட்டு சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடப்பது வழக்கம். இச்சந்தைக்கு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே ஏல முறையில் வாங்கி செல்கின்றனர்.

இதில், ரம்ஜான் பண்டிகையின்போது, மாடு விற்பனை விறுவிறுப்புடன் இருந்தது. அதன்பின் கடந்த வாரம் மாடுகள் விற்பனை மந்தமானது. இந்நிலையில், வரும் 5ம் தேதி ஈஸ்டர் பண்டிகை என்பதால், இதையொட்டி இன்று நடந்த மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் மாடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதில், குறிப்பாக பல வாரங்களுக்கு பிறகு கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில பகுதியிலிருந்து விவசாயிகள் மாடுகளை கொண்டு வந்திருந்தனர். இன்று சந்தைக்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

இதேபோல், கேரள வியாபாரிகளும் பலர் வந்திருந்தனர். இதன் காரணமாக மாடுகள் கூடுதல் விலைக்கு விற்னையானது. இதில், ஆந்திர மாநிலம் 500 கிலோ எடைகொண்ட ஒரு மாடு ரூ.1.65 லட்சம் வரை விலைபோனது. நாட்டு காளை மாடு ரூ.48 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.45 ஆயிரம் வரையிலும், எருமைமாடு ரூ.65 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை என கூடுதல் விலைக்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று ஒரேநாளில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi Cow Market ,POLLACHI ,COW MARKET ,Pollachi, Goa district ,
× RELATED கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி...